Tuesday, August 18, 2009

மேகக் கணினியம்


மேகக் கணினியம் இன்னும் அதிகம் புழக்கத்துக்கு வராத ஒரு கம்ப்பியுட்டர் கலைச்சொல், CLOUD COMPUTING என்றால் பலருக்கு புரியும். தற்போது hot topic ஆக இருக்கும் கூகுள் chrome OS இன் அடிப்படை தொழில்னுட்பமே மேக கணினியம் தான். இணையத்தையும் இணையம் சார்ந்த செயலிகளையும் கொண்டு செயல்படும் தொழில்னுட்பம் என ஜல்லியடிக்காமல் சொல்வதென்றால் 50 ரூபாய்க்கு சிம் கார்டு வாங்கி 5 ரூபாய்க்கு பேசும் தொழில்னுட்பம். அதாவது கணினிக்கோ மென்பொருளுக்கோ ஆகும் செலவுகளை குறைத்து மென்பொருள் பாவணைக்கான செலவுகளை மட்டுமே ஏற்படுத்தும் தொழில்னுட்பம்.


SaaS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Software As A Service என்ற மென்பொருள் சேவையே இதன் ரிஷி மூலம் இதை முதலில் தொடங்கியது salesforce.com எனப்படும் நிறுவனம் 1999 ல் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது பில்லியன் டாலர்களில் கொழிக்கின்றது. SaaS தான் இப்போதைக்கும் இன்னும் சில ஆண்டுகளுக்கும் ஜெயிக்கிற குதிரை, கூகுளில் SaaS companies என்று தட்டி பார்த்தால் தெரியும். இந்த SaaS ஐ கொண்டே மேக கணினியம் உருவாகிக் கொண்டு வருகின்றது. விண்டோஸ் போன்ற ஆபரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளில் ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ண என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்த குறித்த சாஃப்ட்வேருக்கான ஹார்ட்வேர் தேவைகளை பூர்த்தி செய்ய்ய வேண்டும், பின் சாஃப்ட்வேரை விலை கொடுத்து வாங்க வேண்டும் license ஆக்டிவேட் பண்ண வேண்டும் வாங்கியது pirate copy யாக இருக்குமோ என கவலை பட வேண்டும் இதெல்லாம் சரியாக செய்த பின் அது 6 மாதமோ 1 வருடமோ கழித்து காலாவதியகும் பின்...திரும்ப விண்டோசிலிருந்து வாசிக்கவும்...CLOUD COMPUTING ல் இந்த பிரச்சினை இல்லவே இல்லை.

ஏற்கனவே சொன்னது போல் cloud computing என்பது இணையத்தையே ஆதாரமாக கொண்டு செயல்படுவது, ஒரு பெரிய servar ல் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான முடிந்தால் அதிவேகமான ஒரு internet connection மட்டுமே. தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்து கொள்ளலாம் உங்கள் பாவனைக்கான பணத்தை மட்டும் அந்த SaaS provider இடம் செலுத்தினால் போதுமானது. இப்படி தேவையான அல்லது தேவையற்ற எல்லாவிதமான மென்பொருட்களும் செயலி(application) களும் மேகங்கள் போன்ற web server களில் கிடைப்பதனால் தான் இந்த cloud computing. நமக்கு தெரியாமலே இந்த cloud computing ஐ அனுபவித்து கொண்டு இருக்கின்றோம் உதாரணமாக E-Mail service providers, g-mail ஐ எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-Mail கள் எல்லாம் கூகுல் server இலேயே சேமிக்கப்படுகிறது இணையத்தில் இணைந்த கணத்தில் இருந்து அந்த Data களை பாவிப்பவராகிறோம். சொல்லப்போனால் இந்த வலைபதிவது கூட CLOUD COMPUTING இன் ஒரு அம்சம்தான். இந்த CLOUD COMPUTING இனால் அதிகம் லாபமடைய போவது தனி நபர்களை காட்டிலும் கம்பனிகளே காரணம் இந்த தொழில்னுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும் ஒரு மானிட்டரும் குறித்த OS ஐ இயங்க செய்ய தேவையான processor + hard disk போதுமானது மற்ற எல்லாவற்றையும் SssS service provider பார்த்துக்கொள்வார். SaaS சேவைகளை consumption அடிப்படையிலேயோ subscription அடிப்படையிலேயோ பெற்றுக்கொள்ளலாம். இதன் security மற்றும் privacy தொடர்பான கேள்விகளுக்கு authentication என்ற முறையே பதிலாக உல்லது அதாவது username, password முறை. குறித்த SaaS நிறுவன சேவையில் உங்களின் Data மற்றும் Privacy க்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவன சேவைகளை துண்டிக்கவும் அது தொடர்பான financial losses களை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

CLOUD COMPUTING ஹார்ட்வேர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதன் security,privacy தொடர்பான விளக்கங்கள் தெளிவானவையாக இல்லை. A, B என்ற இருவர் ஒரு SaaS நிறுவன சேவைகளை பெறும் போது இருவரும் ஒரே மாதிரியாகதான் தங்களது data வை store பண்ணவோ திரும்ப பெற்றுக்கொள்ளவோ போகிறார்கள், இதில் Authentication முறை மட்டும் போதுமானதாக இருக்கபோவதில்லை என்றாலும் இணையத்துக்காகவே கணினியை பயன் படுத்துவோருக்கு இந்த தொழில்னுட்பம் வரப்பிரசாதமாக அமையலாம். என்னிடம் ஒரு பழைய PIV 3.0 கணினி ஒன்று இருக்கின்றது 3 applications க்கு மேல் ஒரேதாக இயங்க செய்தால் need for speed ல் கார் ஓட்டுவது போலவே இருக்கும் அவ்வளவு சத்தம் போடும் Processor. சாதாரணமாக கணினியில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்ய செய்ய அதன் வேகம் குறைந்து கொண்டே செல்லும் இந்த டெக்னாலஜி கணினிகளில் அந்த பிரச்சினை இருக்காது என்றே சொல்லப்படுகிறது வாங்கிய நாள் எப்படி வேலை செய்ததோ அப்படியே தொடர்ந்து வேலை செய்யும் என்கிறார்கள். எனக்கு எனது கணினியில் கார் சத்தம் வராது என்றால் ஓகே..19 comments:

சூர்யா ௧ண்ணன் said...

நல்ல தகவல். நன்றி!

dhejasvini said...

//சூர்யா ௧ண்ணன் said...
நல்ல தகவல். நன்றி!
//
நன்றி சூர்யா ௧ண்ணன்.

blogpaandi said...

Thanks for the useful information. Hope this technology will arrive soon.

தேஜஸ்வினி said...

//blogpaandi said...
Thanks for the useful information. Hope this technology will arrive soon.
//
thanks blogpandi

ரஹ்மான் said...

உங்கள் வலைப் பக்கத்திற்காக ஒரு பதிவு,
http://tamilbazaar.blogspot.com/2009/08/blog-post_676.html

தேஜஸ்வினி said...

நன்றி ரஹ்மான் ..ஆனால் நான் tamilish பட்டையை நிறுவியிருக்கின்றேனே

ரஹ்மான் said...

மன்னிக்கவும் தங்களுடைய வலைப்பக்கத்தில் ஒட்டுப்பட்டை தெரியவில்லை.மீண்டும் page refress கொடுத்தும் பார்த்தேன் ஒட்டுப்பட்டையை பார்க்க முடியவில்லை.இணைய தடங்கலா என்று தெரியவில்லை.

சரவணன். ச said...

நல்ல தமிழ்ழில் ஒரு அறிவியல் தகவல்.
பாமரனுக்கும் புரியிம் விதமாக எழுதியது மிக அருமை.

தேஜஸ்வினி said...

//சரவணன். ச said...
நல்ல தமிழ்ழில் ஒரு அறிவியல் தகவல்.
பாமரனுக்கும் புரியிம் விதமாக எழுதியது மிக அருமை.
//
மிக்க நன்றி சரவணன்

BOSS said...

thanks
good work
www.techposi.blogspot.com

முக்கோணம் said...

சூப்பர் அழகான உரை நடையில் நெத்தியடியாக சொல்லி விட்டீர்கள்..கணினி சம்பந்தப்பட்ட அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்..

தேஜஸ்வினி said...

//BOSS said...
thanks
good work
www.techposi.blogspot.com
//முக்கோணம் said...
சூப்பர் அழகான உரை நடையில் நெத்தியடியாக சொல்லி விட்டீர்கள்..கணினி சம்பந்தப்பட்ட அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்..
//
மிக்க நன்றி BOSS, முக்கோணம்.

சுபானு said...

முதலில் வலைப்பூக்களில் மணம்வீச வந்திருக்கும் உங்களை வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம். Cloud Computing பற்றிய அருமையான விளக்கும். மொழியாழுமை, மிகச்சிறப்பாக, அதிகம் ஆங்கிலக் கலைச் சொற்களைப் பாவிக்காது தமிழிலேயே தந்திருப்பது மிக அழகு..

நேர்த்தியான பதிவு.

தேஜஸ்வினி said...

//சுபானு said...
முதலில் வலைப்பூக்களில் மணம்வீச வந்திருக்கும் உங்களை வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம். Cloud Computing பற்றிய அருமையான விளக்கும். மொழியாழுமை, மிகச்சிறப்பாக, அதிகம் ஆங்கிலக் கலைச் சொற்களைப் பாவிக்காது தமிழிலேயே தந்திருப்பது மிக அழகு..

நேர்த்தியான பதிவு.
//
மிக்க நன்றி சுபானு

Anonymous said...

உங்கள் பதிவை சுட்டுடாங்கள் தலைவா
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1250684749&archive=&start_from=&ucat=2&

தேஜஸ்வினி said...

அதுக்குள்ளயேவா பதிக்க வந்தே ஒருமாதம் கூட ஆகல என்னோட இரண்டு பதிவுகள் அந்த தளத்தில் காணப்படுகிறது என்னத்த பண்ண??

தேஜஸ்வினி said...

திருடும் அளவிற்கு நம்ம பதிவு இருக்கிறது நல்லதுதானே

Anonymous said...

Naanga yaaru? ;-)

Anonymous said...

Fantаѕtіc gοoԁs from you, man.
I have κеep in mind your stuff priοr to anԁ you
are ѕimρlу toο fаntastic.
I actually likе what you have bought hегe, certainly like ωhat уоu агe stating anԁ
the ωay in ωhiсh ωhereіn you arе saying іt.
You are making it enjoyablе and yοu continue to cаre for tо ѕtay
it wіse. I cаn nоt wait to leaгn faг mогe from you.
Thаt is really а tremеndous wеbsіte.my wеbpage criar uma pagina no facebook para as pessoas curtirem

Post a Comment

 
பூச்சரம்