Wednesday, August 19, 2009

கடவுளின் நகரம்

குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள்? அவர்கள் வாழும் சூழ்நிலை அவர்களை குற்றவாளிகளாக்குகின்றதா? இல்லை ஒருவன் குற்றம் செய்வதால், செய்பவர்களினால் ஈர்க்கப்பட்டு குற்றவாளி ஆகின்றானா? என்பதையே CIDADE DE DEUS | CITY OF GOD திரைப்படம் சொல்கின்றது.இந்தப்படம் மற்றைய Gangster படங்களில் இருந்து வேறுபட்டு நிற்பதற்கு முக்கியமான ஒரு காரணம் இதில் காட்டப்படும் வன்முறைக் கும்பலோ அல்லது அவர்கள் செய்யும் குற்றங்களோ ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் படமாக்கப் படவில்லை மாறாக குற்றங்களை வெறுக்கும் விதத்திலேயே காட்டப்படுகிறது. இதே எதாவது தமிழ் சினிமா என்றால் கதாநாயகனுடன் சேர்ந்து நாமும் சண்டை போட்டிருப்போம் அந்தளவிற்கு வன்முறையை வளர்த்து கொண்டிருக்கின்றது தமிழ் சினிமா.


ஒரு பெரிய விருந்துக்கு தயாராகிக்கொண்டிருகின்றது Lil Dice um அவனது கூட்டமும், அப்போது சமைக்க வத்திருந்த கோழிகளில் ஒன்று தப்பித்து ஓட அதைத் துரத்திக்கொண்டு Lil Dice ம் அவனது கூட்டமும் ஓடுகிறது அப்போது எதிரே வரும் Rocket ஐ பார்த்து அந்த கோழியை பிடி என Lil Dice கத்துகிறான். Rocket கோழியை பிடிக்க கீழே குனியும் போது அவனுக்கு பின்னால் போலீஸ் Lil Dice ஐயும் அவனது கும்பலையும் சுற்றி வளைப்பது தெரிகிறது அப்போது அவன் மனதில் இங்கிருந்து ஓடினாலும் சாக வேண்டும் நின்றாலும் சாக வேண்டும்..இந்த இடமே(CITY OF GOD) இப்படித்தான் நான் சிறியவனாக இருந்ததிலிருந்தே என நினைக்க திரை மாறுகிறது. Rocket இன் கதை என திரை 1960 களில் விரிகிறது.


Shaggy, Goose, Clipper மூவரும் CITY OF GOD இன் Tender Trio என அழைக்கப்படுபவர்கள் அவ்வப்போது பணத்துக்காக சிறு கொள்ளைகளில் ஈடுபடுவது இவர்களின் வழக்கம். Lil DICE மற்றும் Benny இருவரும் இவர்களுடனேயே சேர்ந்து திரிபவர்கள் அதாவது form ஆக முயற்சிப்பவர்கள். இவர்கள் சிறு சிறு கொள்ளைகள் போதாது பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போது Lil Dice ஒரு ரெஸ்டாரென்டை கொள்ளையடிக்கும் ஐடீயாவை கொடுக்கின்றான். அதைத் தொடர்ந்து Tender Trio வும் Lil Dice ம் ரெஸ்டாரென்டைகொள்ளையடிக்க செல்கின்றனர். Lil Dice ஐ காவலுக்கு வெளியே வைத்து விட்டு போலிஸ் வந்தால் ஜன்னலுக்கு சுடு என்று சொல்கின்றனர் பதிலுக்கு Lil Dice தானும் உள்ளே வருவதாக சண்டை பிடிக்கின்றான். அவர்கள், நீ சிறுவன் அவசரப்படாதே என சமாதானபடுத்திவிட்டு உள்ளே செல்கின்றனர். கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் போதே ஜன்னல் உடயும் சத்ததை கேட்டு வெளியே ஒடிவந்து Lil Dice ஐ தேடுகின்றனர் மூவரும், அவன் இல்லாததை கண்டு போலீஸுக்கு பயந்து தலைமறைவாகின்றனர். இடையில் Clipper திருந்தி சர்ச்சில் சேருகிறான் Goose ம் தந்தையின் தொழிலான மீன் விற்பதை செய்யத்தொடங்குகிறான். Shaggy தன் காதலியுடன் திருந்தி வாழ முடிவெடுக்கும் போது போலீஸால் கொல்லப்படுகிறான். Goose க்கும் அந்த பகுதியில் வாழும் ஒருவனின் மனைவிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இருவரையும் கட்டிலில் ஒன்றாக பார்த்த கணவன் Goose ஐ விரட்டுகிறான் ஓடும் Goose ஊருக்கு வெளியே Lil Dice ஐ காண்கிறான். ரெஸ்டாரென்டில் திருடும் போது காணாமல் போனதற்காக Lil Dice ஐ அடிக்கின்றான்.இதற்கிடையில் Rocket தன்னுடன் படிக்குன் Angellina என்பவளுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கின்றான் அவள் தனக்கு போதைப்பொருள் வாங்கித்தருமாரு கேட்க Rockett உம் Carrat என்பவனிடம் போதைபொருட்கள் வாங்கி விற்கும் Blackey என்பவனிடம் செல்கிறான். அங்கு அப்போது வரும் Lil Dice, Blackey யை சுட்டு அந்த இடத்தை கைப்பற்றுக்கிறான். இந்த இடத்தில் திரை மங்கலாக Lil Dice இன் கதை என்று அடுத்த பகுதி தொடங்குகிறது.


ரெஸ்டாரெண்டில் தன்னை தனியாக விட்ட கோபத்தில் வேண்டுமென்றே ஜன்னலை நோக்கி சுட்ட Lil Dice, Tendor Trio வெளியே ஓடியதும் உள்ளே போய் எதிர்ப்படுபவர்களையெல்லாம் சுட்டு தன் கோபத்தை தீர்க்கிறான். பின் அவனும் Benny யும் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டிருக்கும் போதுதான் Goose அவனைக்கண்டு ரெஸ்டாரெண்டில் நடந்த சம்பவத்துக்காக அடிக்கின்றான். அந்த கோபத்தில் Lil Dice Goose ஐ சுட்டு கொல்கிறான். பின் பெரிய தாதாவாக எண்ணி தனது எதிரிகள் எல்லோரையும் கொல்கிறான், Carrat, Benny யின் நண்பன் என்பதால் அவனுக்கு ஏதும் நடக்காதபடி Benny பார்த்துக்கொள்கிறான். இதற்கிடையில் Carrot ம் Lil Dice ஐ கொல்வதற்க்கு Blackey ஐ அனுப்புகிறான் அவன் தவறுதலாக Benny யை சுட்டு கொன்றுவிடுகிறான். தனது நண்பன் இறந்த கோபத்தில் வரும் Lil Dice, Knockout ned என்பவனுடன் சண்டை போட்டு அவனது காதலியை பலாத்காரம் செய்கிறான். அப்படியும் அவனது கோபம் தீராமல் Knockout Ned இன் தம்பியை சுட்டு கொல்கிறான். இதனால் ஆத்திரமடையும் Knockout Ned, Carrat உடன் சேர்ந்து Lil Dice ஐ கொல்ல துணிகிறான். Knockout Ned இன் கதை என்று அடுத்தபகுதிக்கு விரிகிறது கதை.


Knockout Ned உடனான ஒரு சண்டையின் போது Lil Dice காயத்துடன் தப்பிக்க Knockout Ned கைது செய்யப்படுகிறான். தொடர்ந்து அவனது படங்கள் பத்திரிகையில் வந்திருப்பதை பார்த்து Lil Dice நான் தான் இங்கே பெரியவன் என் படம் தான் பத்திரிகையில் வரவேண்டும் என சொல்லி அப்போது தான் ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்திருக்கும் Rockett ஐ பிடித்து தனது படங்களை விதவிதமாக எடுக்க சொல்கிறான். பின் Rockett அந்த படங்களை தனது அலுவலகத்தில் கொடுத்து கழுவச்சொல்கிறான். ஆனால் மறுநாள் பத்திரிகையில் அந்த படங்கள் வெளியாகி இருப்பதை பார்த்து பயப்படுகிறான். அனால் பத்திரிகையில் யாரும் லேசில் போக முடியாத அப்பகுதி படங்களை எடுத்ததிற்காக அவனுக்கு நிறைய பணம் தரப்படுகிரது அதனால் தொடர்ந்து படங்கள் எடுக்க Rockett உம் சம்மதிக்கின்றான். இதற்கிடையில் Lil Dice ம் தனது படங்கள் பத்திரிகையில் வந்திருப்பதை பார்த்து பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். "BEGINNING OF THE END" என்று திரையில் எழுத்துக்கள் தோன்ற படத்தில் முதலில் தோன்றிய காட்சி திரும்ம்பவும் தோன்றுகிறது. Lil Dice ம் அவனது கும்பலும் கோழியை துரத்தி வர எதிரே போலீஸ் அவனை பிடிக்கும் எண்ணத்துடன் வருகின்றனர் ஆனால் Lil Dice இன் கும்பலின் எண்ணிக்கையையும் அவர்களிடத்தில் உள்ள துப்பாக்கிகளையும் பார்த்து போலீஸ் பின்வாங்க திடிரென்று வந்த Knockout Ned இன் ஆட்கள் அவர்களை சுடத்தொடங்குகிறார்கள். சண்டையில் Knockout Ned இறக்க Carrat போலீஸிடம் சரணடைகிறான் Lil Dice ஐ போலீஸ் கைது செய்கிறது. போலீஸிடம் லஞ்சம் கொடுத்து தப்பிக்கும் Lil Dice ஐ பார்க்க சிறுவர் கூட்டம் ஒன்று வர அவர்களை பார்த்து Lil Dice வாங்கடா நாம சேர்ந்து தொழில் பண்ணலாம் எனும் போது அவர்கள் Lil Dice ஐ சுட்டு கொன்று விட்டு இனி அந்த தொழில் நமக்குத்தான் என ஓடுகிறார்கள். இதையெல்லாம் மறைந்திருந்து படமெடுக்கும் Rocket பெரிய பத்திரிகையாளனாக ஆகிறான். உண்மை கதையை அடிப்படையாக கொண்டது என திரையில் எழுத்துக்கள் ஓடத்தொடங்குகின்றன.


காட்சிகளை முன் பின்னாக சொல்லும் வகையில் PULP FICTION ஐ ஞாபகப் படுத்தும் இத்திரைப்படம் action திரைப்படங்களின் முன்னோடியாக கருதப்படுகிறது.
திரைப்படங்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட இணையதளங்களில் Ganster movies பிரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ள இத்திரைப்படம். ஓளிப்பதிவிலும்,படத்தொகுப்பிலும் பல புதிய பரிமாணங்களை கையாண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. Rio De Genero வின் நிழல் உலகத்தை தழுவி எடுக்கப்பட்ட இத் திரைப்படம் பல்வேரு விழாக்களில் 40 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. 2002 ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இயக்குனர் Fernando Meirelles.No comments:

Post a Comment

 
பூச்சரம்