Sunday, September 20, 2009

எங்கு காண்கிலும்.....


எங்கு காண்கிலும் கடவுளென்றால் ஆன்மீகம்
எங்கு காண்கிலும் நீயென்றால்......


தெருவில் நீ வருவாய் என காத்திருக்கையில்
எதிர் வரும் எல்லா பெண்களிலும் உன் சாயல்.


பெண்ணுடல் பெரும் தணல்
ஆண் மனம் சாம்பல்







Sunday, August 30, 2009

எனக்கு பிடித்த....

எனக்கு பிடித்த தனிமை,

மழை,

நேற்றைய காற்று வீசும் சூரியன் F.M இன் மணித்துளிகள்,

இரவில் எரியும் ஒற்றை விளக்கு கம்பம்,

என அனைத்துக்கும் உன்னை பிடித்து போய்
உன் நினைவிலேயே சங்கமிக்கின்றன

Sunday, August 23, 2009

ஸ்ரேயாவின் கந்தசாமி


முன் டிஸ்கி- நாடோடிகள் படத்தில் காது கேட்காமல் போன பாண்டியை போலீஸ் விசாரிக்கும் ஸீனை நினைச்சிகிட்டு கீழ படிங்க....


படத்துல கதை என்ன??
-ஒன்னுமில்ல...


விக்ரமுக்குக்கும் அவரோடு சேர்ந்து ரெய்டுக்கு போறவனுங்களுக்கும் என்ன சம்பந்தம்??

- எல்லாருமே பள்ளிகூடத்துல இருந்து ஒன்னா படிச்சவய்ங்க..


டைரக்டர் சுசி கணேசனுக்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்??

-அவரும் விக்ரமோட ஒன்னா படிச்சவரு..


CBI JOINT DIRECTOR க்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்??

-அவரும் விக்ரமோட சேர்ந்து எழைகளுக்கு உதவுறாறாம்..


முமைத்கானுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்??

-அவருதான் படத்துக்கு எல்லமே..அவராலதான் படமே முடியுதுனா பாத்துக்குங்க.


இப்படி வில்லன், பிரபு,வடிவேலு தவிர மத்த எல்லாரும் சேர்ந்து பணக்காரங்ககிட்ட பணத்தப் புடுங்கி எழைகளுக்கு கொடுக்குறாங்க அத போலீஸ் படம் முழுக்க தேடிக்கிட்டே இருக்காங்க சும்மா இல்ல மூனெகால் மணித்தியாலமா, கடைசியில புடிக்கிறாங்க..


அவ்ளோதாம்பா முடிஞ்சுபோச்...போங்க போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்க..


பின் டிஸ்கி- படத்துல ஒரே ஆறுதல் ஸ்ரேயா..சும்மா சொல்லகூடாது பொண்ணு இங்க்லிஷ் உடம்போட நின்னு விளையாடுது. ஸ்ரேயா இடுப்புக்கே டிக்கட்டுக்கு குடுத்த காசு செரிச்சு போச்சு



Thursday, August 20, 2009

Web 3.0


Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0.

இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.

Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.

ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.

Wednesday, August 19, 2009

கடவுளின் நகரம்

குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள்? அவர்கள் வாழும் சூழ்நிலை அவர்களை குற்றவாளிகளாக்குகின்றதா? இல்லை ஒருவன் குற்றம் செய்வதால், செய்பவர்களினால் ஈர்க்கப்பட்டு குற்றவாளி ஆகின்றானா? என்பதையே CIDADE DE DEUS | CITY OF GOD திரைப்படம் சொல்கின்றது.இந்தப்படம் மற்றைய Gangster படங்களில் இருந்து வேறுபட்டு நிற்பதற்கு முக்கியமான ஒரு காரணம் இதில் காட்டப்படும் வன்முறைக் கும்பலோ அல்லது அவர்கள் செய்யும் குற்றங்களோ ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் படமாக்கப் படவில்லை மாறாக குற்றங்களை வெறுக்கும் விதத்திலேயே காட்டப்படுகிறது. இதே எதாவது தமிழ் சினிமா என்றால் கதாநாயகனுடன் சேர்ந்து நாமும் சண்டை போட்டிருப்போம் அந்தளவிற்கு வன்முறையை வளர்த்து கொண்டிருக்கின்றது தமிழ் சினிமா.


ஒரு பெரிய விருந்துக்கு தயாராகிக்கொண்டிருகின்றது Lil Dice um அவனது கூட்டமும், அப்போது சமைக்க வத்திருந்த கோழிகளில் ஒன்று தப்பித்து ஓட அதைத் துரத்திக்கொண்டு Lil Dice ம் அவனது கூட்டமும் ஓடுகிறது அப்போது எதிரே வரும் Rocket ஐ பார்த்து அந்த கோழியை பிடி என Lil Dice கத்துகிறான். Rocket கோழியை பிடிக்க கீழே குனியும் போது அவனுக்கு பின்னால் போலீஸ் Lil Dice ஐயும் அவனது கும்பலையும் சுற்றி வளைப்பது தெரிகிறது அப்போது அவன் மனதில் இங்கிருந்து ஓடினாலும் சாக வேண்டும் நின்றாலும் சாக வேண்டும்..இந்த இடமே(CITY OF GOD) இப்படித்தான் நான் சிறியவனாக இருந்ததிலிருந்தே என நினைக்க திரை மாறுகிறது. Rocket இன் கதை என திரை 1960 களில் விரிகிறது.


Shaggy, Goose, Clipper மூவரும் CITY OF GOD இன் Tender Trio என அழைக்கப்படுபவர்கள் அவ்வப்போது பணத்துக்காக சிறு கொள்ளைகளில் ஈடுபடுவது இவர்களின் வழக்கம். Lil DICE மற்றும் Benny இருவரும் இவர்களுடனேயே சேர்ந்து திரிபவர்கள் அதாவது form ஆக முயற்சிப்பவர்கள். இவர்கள் சிறு சிறு கொள்ளைகள் போதாது பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போது Lil Dice ஒரு ரெஸ்டாரென்டை கொள்ளையடிக்கும் ஐடீயாவை கொடுக்கின்றான். அதைத் தொடர்ந்து Tender Trio வும் Lil Dice ம் ரெஸ்டாரென்டைகொள்ளையடிக்க செல்கின்றனர். Lil Dice ஐ காவலுக்கு வெளியே வைத்து விட்டு போலிஸ் வந்தால் ஜன்னலுக்கு சுடு என்று சொல்கின்றனர் பதிலுக்கு Lil Dice தானும் உள்ளே வருவதாக சண்டை பிடிக்கின்றான். அவர்கள், நீ சிறுவன் அவசரப்படாதே என சமாதானபடுத்திவிட்டு உள்ளே செல்கின்றனர். கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் போதே ஜன்னல் உடயும் சத்ததை கேட்டு வெளியே ஒடிவந்து Lil Dice ஐ தேடுகின்றனர் மூவரும், அவன் இல்லாததை கண்டு போலீஸுக்கு பயந்து தலைமறைவாகின்றனர். இடையில் Clipper திருந்தி சர்ச்சில் சேருகிறான் Goose ம் தந்தையின் தொழிலான மீன் விற்பதை செய்யத்தொடங்குகிறான். Shaggy தன் காதலியுடன் திருந்தி வாழ முடிவெடுக்கும் போது போலீஸால் கொல்லப்படுகிறான். Goose க்கும் அந்த பகுதியில் வாழும் ஒருவனின் மனைவிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இருவரையும் கட்டிலில் ஒன்றாக பார்த்த கணவன் Goose ஐ விரட்டுகிறான் ஓடும் Goose ஊருக்கு வெளியே Lil Dice ஐ காண்கிறான். ரெஸ்டாரென்டில் திருடும் போது காணாமல் போனதற்காக Lil Dice ஐ அடிக்கின்றான்.இதற்கிடையில் Rocket தன்னுடன் படிக்குன் Angellina என்பவளுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கின்றான் அவள் தனக்கு போதைப்பொருள் வாங்கித்தருமாரு கேட்க Rockett உம் Carrat என்பவனிடம் போதைபொருட்கள் வாங்கி விற்கும் Blackey என்பவனிடம் செல்கிறான். அங்கு அப்போது வரும் Lil Dice, Blackey யை சுட்டு அந்த இடத்தை கைப்பற்றுக்கிறான். இந்த இடத்தில் திரை மங்கலாக Lil Dice இன் கதை என்று அடுத்த பகுதி தொடங்குகிறது.


ரெஸ்டாரெண்டில் தன்னை தனியாக விட்ட கோபத்தில் வேண்டுமென்றே ஜன்னலை நோக்கி சுட்ட Lil Dice, Tendor Trio வெளியே ஓடியதும் உள்ளே போய் எதிர்ப்படுபவர்களையெல்லாம் சுட்டு தன் கோபத்தை தீர்க்கிறான். பின் அவனும் Benny யும் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டிருக்கும் போதுதான் Goose அவனைக்கண்டு ரெஸ்டாரெண்டில் நடந்த சம்பவத்துக்காக அடிக்கின்றான். அந்த கோபத்தில் Lil Dice Goose ஐ சுட்டு கொல்கிறான். பின் பெரிய தாதாவாக எண்ணி தனது எதிரிகள் எல்லோரையும் கொல்கிறான், Carrat, Benny யின் நண்பன் என்பதால் அவனுக்கு ஏதும் நடக்காதபடி Benny பார்த்துக்கொள்கிறான். இதற்கிடையில் Carrot ம் Lil Dice ஐ கொல்வதற்க்கு Blackey ஐ அனுப்புகிறான் அவன் தவறுதலாக Benny யை சுட்டு கொன்றுவிடுகிறான். தனது நண்பன் இறந்த கோபத்தில் வரும் Lil Dice, Knockout ned என்பவனுடன் சண்டை போட்டு அவனது காதலியை பலாத்காரம் செய்கிறான். அப்படியும் அவனது கோபம் தீராமல் Knockout Ned இன் தம்பியை சுட்டு கொல்கிறான். இதனால் ஆத்திரமடையும் Knockout Ned, Carrat உடன் சேர்ந்து Lil Dice ஐ கொல்ல துணிகிறான். Knockout Ned இன் கதை என்று அடுத்தபகுதிக்கு விரிகிறது கதை.


Knockout Ned உடனான ஒரு சண்டையின் போது Lil Dice காயத்துடன் தப்பிக்க Knockout Ned கைது செய்யப்படுகிறான். தொடர்ந்து அவனது படங்கள் பத்திரிகையில் வந்திருப்பதை பார்த்து Lil Dice நான் தான் இங்கே பெரியவன் என் படம் தான் பத்திரிகையில் வரவேண்டும் என சொல்லி அப்போது தான் ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்திருக்கும் Rockett ஐ பிடித்து தனது படங்களை விதவிதமாக எடுக்க சொல்கிறான். பின் Rockett அந்த படங்களை தனது அலுவலகத்தில் கொடுத்து கழுவச்சொல்கிறான். ஆனால் மறுநாள் பத்திரிகையில் அந்த படங்கள் வெளியாகி இருப்பதை பார்த்து பயப்படுகிறான். அனால் பத்திரிகையில் யாரும் லேசில் போக முடியாத அப்பகுதி படங்களை எடுத்ததிற்காக அவனுக்கு நிறைய பணம் தரப்படுகிரது அதனால் தொடர்ந்து படங்கள் எடுக்க Rockett உம் சம்மதிக்கின்றான். இதற்கிடையில் Lil Dice ம் தனது படங்கள் பத்திரிகையில் வந்திருப்பதை பார்த்து பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். "BEGINNING OF THE END" என்று திரையில் எழுத்துக்கள் தோன்ற படத்தில் முதலில் தோன்றிய காட்சி திரும்ம்பவும் தோன்றுகிறது. Lil Dice ம் அவனது கும்பலும் கோழியை துரத்தி வர எதிரே போலீஸ் அவனை பிடிக்கும் எண்ணத்துடன் வருகின்றனர் ஆனால் Lil Dice இன் கும்பலின் எண்ணிக்கையையும் அவர்களிடத்தில் உள்ள துப்பாக்கிகளையும் பார்த்து போலீஸ் பின்வாங்க திடிரென்று வந்த Knockout Ned இன் ஆட்கள் அவர்களை சுடத்தொடங்குகிறார்கள். சண்டையில் Knockout Ned இறக்க Carrat போலீஸிடம் சரணடைகிறான் Lil Dice ஐ போலீஸ் கைது செய்கிறது. போலீஸிடம் லஞ்சம் கொடுத்து தப்பிக்கும் Lil Dice ஐ பார்க்க சிறுவர் கூட்டம் ஒன்று வர அவர்களை பார்த்து Lil Dice வாங்கடா நாம சேர்ந்து தொழில் பண்ணலாம் எனும் போது அவர்கள் Lil Dice ஐ சுட்டு கொன்று விட்டு இனி அந்த தொழில் நமக்குத்தான் என ஓடுகிறார்கள். இதையெல்லாம் மறைந்திருந்து படமெடுக்கும் Rocket பெரிய பத்திரிகையாளனாக ஆகிறான். உண்மை கதையை அடிப்படையாக கொண்டது என திரையில் எழுத்துக்கள் ஓடத்தொடங்குகின்றன.


காட்சிகளை முன் பின்னாக சொல்லும் வகையில் PULP FICTION ஐ ஞாபகப் படுத்தும் இத்திரைப்படம் action திரைப்படங்களின் முன்னோடியாக கருதப்படுகிறது.
திரைப்படங்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட இணையதளங்களில் Ganster movies பிரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ள இத்திரைப்படம். ஓளிப்பதிவிலும்,படத்தொகுப்பிலும் பல புதிய பரிமாணங்களை கையாண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. Rio De Genero வின் நிழல் உலகத்தை தழுவி எடுக்கப்பட்ட இத் திரைப்படம் பல்வேரு விழாக்களில் 40 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. 2002 ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இயக்குனர் Fernando Meirelles.



THE FAR SPENT DAY

அண்மையில் அழகான என்பதை விட தெளிவான பாசாங்கற்ற நீண்ட சிறுகதை போன்ற நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. வாசிப்பது ஒன்றும் புதுமையான விடயமல்ல என்றாலும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் தொடர்ச்சியாக வாசித்து முடித்தது அடிக்கடி கிட்டாத ஒரு அனுபவம். நடுவில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வசித்தாலும், சாருவின் ஸீரோ டிகிரி கூட நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியாக வாசிக்காதது ஏதோ முக்கியமான ஒரு பொருளை தவற விட்ட உணர்வை ஏற்படுத்தியிருந்தது திரும்ப வாசிக்க கையில் எடுத்தாலும் எதோ ஒரு இனம் புரியாத உணர்வு படிக்க விடாமல் தடுக்கின்றது. அந்த ஒரு காரணத்துக்காகவே சாருவின் முதல் நாவலான எக்ஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்சி பனியனும் என்ற புத்தகத்தை வாங்கி நிறைய நாளாக வாசிக்காமல் வைத்துக்கொண்டிருக்கின்றேன்.

இப்போது சொல்லவந்த புத்தகத்துக்கும் சாருவுக்குமோ இல்லை பின் நவீனத்துவத்துக்குமோ எந்த தொடர்பும் இல்லை. NIHAL DE SILVA என்பவரின் THE FAR SPENT DAY எனும் புத்தகம். ஆரம்பத்திலேயே நான் பெரிதாக நம் நாட்டு எழுத்தாளர்களை படித்ததில்லை அவ்வளவாக தேடி படிக்கும் நாட்டமும் இருந்ததில்லை சின்ன வயதில் தி.ஞானசேகரம் என்பவருடைய அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதை தொகுப்பை அந்த பெயருக்காகவே படித்ததாக ஞாபகம். இப்போது கூட அப்புத்தகம் அலுமாரியில் இருப்பதால்தான் எழுத்தாளரின் பெயரையும் சொல்கிறேன். மற்றபடி சுஜாதாவின் போதையிலேயே நாட்களை கழித்து இருக்கின்றேன் எந்த எழுத்தென்றாலும் அதை சுஜாதாவுடன் ஒப்பிட்டு பார்ப்பது என் சிறுவயது வழக்கமாக இருந்தது. அந்த சிறுவயது அனுமானத்துடனேயே இப்போதும் நாட்கள் போய்க்கொண்டிருந்தன THE FAR SPENT DAY வாசிக்கும் வரை, நிஜமாகவே சுஜாதாவின் சமீபகால கதைகளுக்கு ஒப்பான நடையில் எழுதப்பட்ட ஒரு நாவல் இது. ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன் எனக்கு எழுந்தது ஒரே ஒரு எண்ணம் தான், அடக்கடவுளே இவ்வளவு நாளா மடையனாவே இருந்திருக்கிறோமே என்பதுதான். வழமையாக பஸ்ஸில் போகும் போது நான் படிப்பது கிடையாது, பெண்களை பார்ப்பதற்கே பஸ்ஸில் நேரம் சரியாக இருக்கும் போது புத்தகத்துக்கு எங்கே?? ஆனால் கடைசியாக கொழும்பில் இருந்து வந்த போது தான் புத்தகத்தை படிக்க ஆரம்பிதேன் கிட்டத்தட்ட 40 பக்கங்களை முடித்து விட்டேன். எனது பஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை அது.

எனக்கு இந்த புத்தகம் அறிமுகம் ஆனவிதம் கொஞ்சம் வேடிக்கையானது. ஒரு வாரத்துக்கு முன் நானும் Adrian ம் Kotahena Flags and whistle க்கு குடிக்க சென்றிருந்தோம் வழமையாக கூட்டமாக தான் செல்லுவோம் இம்முறை எவனைக் கேட்டாலும் பிஸி என்கிறான். கூட்டமாக போவதென்றால் எங்காவது cheap ஆன ரெஸ்டாரென்ட் தான் எங்களின் இலக்காக இருக்கும் Flags and Whistle கூட்டம் தாங்காதென்பதில்லை எங்கள் பர்ஸ் தாங்காது Flags and Whistle கொழும்பு துறைமுகத்தை பார்த்து 5வது மாடியிலமைந்த ரெஸ்டாரென்ட். உண்மையிலேயே கூட்டமாக கூத்தடிக்க உதவாத இடம். அன்று இரண்டு பேர் மட்டும் என்பதால் அந்த இடத்தை தெரிவு செய்தோம் அலுவலகத்திலிருந்தும் 5 நிமிட தூரம் என்பதால் 8 மணியளவில் முதல் ரவுண்டும் தொடங்கி விட்டோம். Adrian என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் என்னை விட 9 வயது மூத்தவன் அலுவலகத்திலும் senior நிலை என்றாலும் நண்பனைப் போலதான். இருவருக்கும் மூன்று ஒற்றுமைகள் இதில் மூன்றாவது அன்றுதான் தெரிய வந்தது அது புத்தகங்கள் முதல் இரண்டும் குடிப்பதும், பெண்களும். தவறாக நினைக்க வேண்டாம் பெண்களை பற்றி கதைப்பதோடு சரி அவனுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். புத்தகங்களை பற்றி பேசும் போது தான் மேற் சொன்ன புத்தகத்தை பற்றிய பேசும் வந்தது. Adrianனின் வாசிப்பறிவோடு ஒப்பிட்டால் நானெல்லாம் பூஜ்ஜியம்தான் அவன் பேசினான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் என்று தன் சொல்லவேண்டும். நானும் எனக்கு தெரிந்த சுஜாதா நடையெல்லாம் சொல்ல அவனும் இந்த புத்தகத்தை சொல்லி, அப்போ உனக்கு இந்த புத்தகம் பிடிக்கும் நாளை கொண்டு வந்து தருகிறேன் என்றும் சொன்னான், நானும் சுஜாதாவும் NIHAL DE SILVA வுமா இவன் காமெடி பண்ணுகிறான் சரி நாளை பார்ப்போம் என 11 மணிக்கு வெளியே வந்தோம். புத்தகத்தை படித்தவுடனான உணர்வுகளை தன் மேலே பத்தியில் சொல்லி விட்டேனே இனி புத்தகத்தை பற்றி..

பட்டப்படிப்பை முடித்த இரு நண்பர்கள் அவர்களின் பழைய பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கேளிக்கை நிகழ்வில் கலந்து கொள்வதுடன் தொடங்குகிறது புத்தகம். நிகழ்வின் முடிவில் ஏற்படும் சிறிய கைகலப்பு அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பாதிப்புகளை ஏற்படுதுகிறது என்பதையே புத்தகம் சொல்கிறது. சிம்பிளான இந்த கமர்ஷியல் தமிழ் சினிமா போன்ற இந்த கதையை தனது திகட்டாத நடையின் மூலம், நான் முன்பு சொன்னது போல் கிட்டத்தட்ட சுஜாதா நடையை ஒத்த நடையிலேயே நகர்த்திச் செல்கிறார். கதையில் அவர் சமகால இலங்கையின் சாபங்களை கையாண்டு இருப்பதுதான் ஆச்சர்யம் அதுவும் இலங்கை பத்திரிகையாளர்களுக்கு அரசியல் பலத்தால் நிகழும் பாதிப்புகளையே கதையின் மையக்கருவாக கொண்டு செல்கிறார். அரசியல் பலத்துடன் மோதும் ஒருவன் தனக்கு சொந்தமான சகலதையும் இழந்து தனக்கு உதவுபவர்களையும் இழந்து இறுதியில் தானும் வன்முறையை கையில் எடுக்கும் படியாக அமைக்கபட்ட கதையை வெவ்வேறு கதைக்களங்களில் நகர்த்துகிறார் எழுத்தாளர். கதையின் பிரதான பாத்திரமான Ravi Perera என்பவனுக்கும் Journalist ஆக வரும் Tanya என்பளுக்கும் இடையிலான காதல் போன்ற உணர்வு மிக அழகாக எடுத்து சொல்லப்பட்டிருக்கின்றது. இருவரும் தனியாக இருக்கும் ஒரு இரவில் Ravi Perera அவளை முத்தமிடும் போது அவள் அதற்கு அனுமதித்து விட்டு அவன் எல்லை மீறும் போது அவள் , முத்தம் O.K ஆனால் அதற்கும் மேல் என்றால் நீ நம்மிருவருக்குமான உறவை பற்றி சீரியஸாக இருந்தால் தான் உண்டு என்கிறாள், அவன் அதற்கு உன்னை எனக்கு பிடிக்கும் அவ்வளவுதான் என்கிறான். பிறிதொரு சமயத்தில் அவன் அவளை நெருங்கும் போது அவள் விருப்பமில்லமல் அன்றைக்கு நீ பொய் சொல்லியிருந்தால் உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்கிறாள். இந்த வரிகள் அப்படியே இன்றைய இளைய தலைமுறையை வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் Kadu Piyal என்பவன் தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு இளம் பிக்பொக்கட் பெண்ணை கொலை செய்தவர்களை பழி வாங்கும் பகுதி KILL BILL படத்தின் 5 நிமிட திரைக்தை போன்ற உணர்வை தருகிறது.

கதை நடை என்னமோ சுஜாதாவை போல் இருந்தாலும் கண்டிப்பாக Nihal De Silva சுஜாதாவை படித்திருக்க வாய்ப்பில்லை அதை விட அவருக்கு தமிழ் வாசிக்கும் அளவிற்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிங்கள எழுத்தளரான இவர் தனது முதல் நாவலான THE ROAD FROM ELEPHANT PASS எனும் படைப்புக்கு இலங்கையின் சிறந்த ஆங்கில இலக்கியத்துக்கான விருதை 2003 ல் பெற்றவர். THE FAR SPENT DAY இவரின் இரண்டாவது புத்தகம். இவரின் மூன்றாவது புத்தகம் THE GINIRELLA CONSPIRACY. கிட்டத்தட்ட 3 ஆண்டு காலப்பகுதியில் 3 சிறந்த புத்தகங்களை எழுதிய இவர் 2006 மே மாதத்தில் வில்பத்து காட்டில் கண்ணி வெடியில் சிக்கி பலியானார். இவரின் விருது வென்ற புத்தகமான THE ROAD FROM ELEPHANT PASS இன் கதையே இரண்டு பேர் ஆனையிறவில் இருந்து வில்பத்து காட்டினூடாக கொழும்பு வருவதுதான், Wild LIfe ல் மிகவும் ஆர்வமுள்ள இவரை அவர் மிகவும் ரசித்த இடத்தில் தீவிரவாதம் விழுங்கியது தூரதிஷ்டமானதே

Tuesday, August 18, 2009

மேகக் கணினியம்


மேகக் கணினியம் இன்னும் அதிகம் புழக்கத்துக்கு வராத ஒரு கம்ப்பியுட்டர் கலைச்சொல், CLOUD COMPUTING என்றால் பலருக்கு புரியும். தற்போது hot topic ஆக இருக்கும் கூகுள் chrome OS இன் அடிப்படை தொழில்னுட்பமே மேக கணினியம் தான். இணையத்தையும் இணையம் சார்ந்த செயலிகளையும் கொண்டு செயல்படும் தொழில்னுட்பம் என ஜல்லியடிக்காமல் சொல்வதென்றால் 50 ரூபாய்க்கு சிம் கார்டு வாங்கி 5 ரூபாய்க்கு பேசும் தொழில்னுட்பம். அதாவது கணினிக்கோ மென்பொருளுக்கோ ஆகும் செலவுகளை குறைத்து மென்பொருள் பாவணைக்கான செலவுகளை மட்டுமே ஏற்படுத்தும் தொழில்னுட்பம்.


SaaS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Software As A Service என்ற மென்பொருள் சேவையே இதன் ரிஷி மூலம் இதை முதலில் தொடங்கியது salesforce.com எனப்படும் நிறுவனம் 1999 ல் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது பில்லியன் டாலர்களில் கொழிக்கின்றது. SaaS தான் இப்போதைக்கும் இன்னும் சில ஆண்டுகளுக்கும் ஜெயிக்கிற குதிரை, கூகுளில் SaaS companies என்று தட்டி பார்த்தால் தெரியும். இந்த SaaS ஐ கொண்டே மேக கணினியம் உருவாகிக் கொண்டு வருகின்றது. விண்டோஸ் போன்ற ஆபரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளில் ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ண என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்த குறித்த சாஃப்ட்வேருக்கான ஹார்ட்வேர் தேவைகளை பூர்த்தி செய்ய்ய வேண்டும், பின் சாஃப்ட்வேரை விலை கொடுத்து வாங்க வேண்டும் license ஆக்டிவேட் பண்ண வேண்டும் வாங்கியது pirate copy யாக இருக்குமோ என கவலை பட வேண்டும் இதெல்லாம் சரியாக செய்த பின் அது 6 மாதமோ 1 வருடமோ கழித்து காலாவதியகும் பின்...திரும்ப விண்டோசிலிருந்து வாசிக்கவும்...CLOUD COMPUTING ல் இந்த பிரச்சினை இல்லவே இல்லை.

ஏற்கனவே சொன்னது போல் cloud computing என்பது இணையத்தையே ஆதாரமாக கொண்டு செயல்படுவது, ஒரு பெரிய servar ல் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான முடிந்தால் அதிவேகமான ஒரு internet connection மட்டுமே. தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்து கொள்ளலாம் உங்கள் பாவனைக்கான பணத்தை மட்டும் அந்த SaaS provider இடம் செலுத்தினால் போதுமானது. இப்படி தேவையான அல்லது தேவையற்ற எல்லாவிதமான மென்பொருட்களும் செயலி(application) களும் மேகங்கள் போன்ற web server களில் கிடைப்பதனால் தான் இந்த cloud computing. நமக்கு தெரியாமலே இந்த cloud computing ஐ அனுபவித்து கொண்டு இருக்கின்றோம் உதாரணமாக E-Mail service providers, g-mail ஐ எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-Mail கள் எல்லாம் கூகுல் server இலேயே சேமிக்கப்படுகிறது இணையத்தில் இணைந்த கணத்தில் இருந்து அந்த Data களை பாவிப்பவராகிறோம். சொல்லப்போனால் இந்த வலைபதிவது கூட CLOUD COMPUTING இன் ஒரு அம்சம்தான். இந்த CLOUD COMPUTING இனால் அதிகம் லாபமடைய போவது தனி நபர்களை காட்டிலும் கம்பனிகளே காரணம் இந்த தொழில்னுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும் ஒரு மானிட்டரும் குறித்த OS ஐ இயங்க செய்ய தேவையான processor + hard disk போதுமானது மற்ற எல்லாவற்றையும் SssS service provider பார்த்துக்கொள்வார். SaaS சேவைகளை consumption அடிப்படையிலேயோ subscription அடிப்படையிலேயோ பெற்றுக்கொள்ளலாம். இதன் security மற்றும் privacy தொடர்பான கேள்விகளுக்கு authentication என்ற முறையே பதிலாக உல்லது அதாவது username, password முறை. குறித்த SaaS நிறுவன சேவையில் உங்களின் Data மற்றும் Privacy க்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவன சேவைகளை துண்டிக்கவும் அது தொடர்பான financial losses களை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

CLOUD COMPUTING ஹார்ட்வேர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதன் security,privacy தொடர்பான விளக்கங்கள் தெளிவானவையாக இல்லை. A, B என்ற இருவர் ஒரு SaaS நிறுவன சேவைகளை பெறும் போது இருவரும் ஒரே மாதிரியாகதான் தங்களது data வை store பண்ணவோ திரும்ப பெற்றுக்கொள்ளவோ போகிறார்கள், இதில் Authentication முறை மட்டும் போதுமானதாக இருக்கபோவதில்லை என்றாலும் இணையத்துக்காகவே கணினியை பயன் படுத்துவோருக்கு இந்த தொழில்னுட்பம் வரப்பிரசாதமாக அமையலாம். என்னிடம் ஒரு பழைய PIV 3.0 கணினி ஒன்று இருக்கின்றது 3 applications க்கு மேல் ஒரேதாக இயங்க செய்தால் need for speed ல் கார் ஓட்டுவது போலவே இருக்கும் அவ்வளவு சத்தம் போடும் Processor. சாதாரணமாக கணினியில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்ய செய்ய அதன் வேகம் குறைந்து கொண்டே செல்லும் இந்த டெக்னாலஜி கணினிகளில் அந்த பிரச்சினை இருக்காது என்றே சொல்லப்படுகிறது வாங்கிய நாள் எப்படி வேலை செய்ததோ அப்படியே தொடர்ந்து வேலை செய்யும் என்கிறார்கள். எனக்கு எனது கணினியில் கார் சத்தம் வராது என்றால் ஓகே..



Monday, August 17, 2009

கூகிள் க்ரோம்(CHROME)

கடந்த மாதம் கூகுள் தனது OS வெளியீட்டை அறிவித்தாலும் அறிவித்தது ஐ.டி உலகம் ஆடித்தான் போய் இருக்கின்றது, அதிலும் மைக்ரொசாஃப்ட் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் கண்டுள்ளது, பிங் யாஹுவுடனான புதிய கூட்டணி சந்தை நிலவரத்தில் மைக்ரொசாஃப்டுக்கு ஆறுதல் அளித்தாலும் தனது ஆபரேடிங் சிஸ்டம் தாணாதிக்க நிலையை தக்கவைத்து கொள்வதில் மைக்ரொசாஃப்ட் தலையை பிய்த்துக் கொள்கிறது என்பதே இந்த கூட்டணிகளின் காரணம்.



ஏற்கனவே தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்டத்தின் தொடர்ச்சியான சறுக்கல்களினால் நொந்து போயிருந்த மைக்ரொசாஃப்ட் தனது வெளிவர இருக்கும் புதிய ஆபரேடிங் சிஸ்டமான WINDOWS 7 பெரிதும் நம்பியிருக்கின்றது. வரும் அக்டோபரில் வெளிவர இருக்கும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் 2009 டிசம்பருக்குள் 170 மில்லியன் பயனீட்டார்களை சென்றடையும் என கருத்து கணிப்புக்கள் சொன்னாலும் கூகிளின் புதிய ஆபரேடிங் சிஸ்டத்துக்கன அறிவிப்பு இந்த 170 மில்லியனில் கொஞ்சம் அல்ல நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை என்றாலும் தனது புதிய OS 2010 இன் பிற்ப்பகுதியிலேயே வெளிவரும் என்று கூகிள் அறிவித்து இருப்பது மைக்ரொசாஃப்டுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை தரலாம் கவனிக்கவும் தற்காலிக ஆறுதலே. காரணம் மைக்ரொசாஃப்ட் தனது முந்தைய பதிப்பான விஸ்டாவின் குறைகளை நிவர்த்திக்கும் முகமாக முக்கியமாக user friendliness ஐ அதிகரிக்கும் விதமாகவே WINDOWS 7 தயார் செய்து வரும் நிலையில் கூகிள் 16 அடி பாய்ந்து வருங்காலத்தில் கணனி உலகத்தையே ஆளக்கூடிய ஒரு தொழில்னுட்பமாக கருதக்கூடிய CLOUD COMPUTING(சில security issues இருந்தாலும்) எனப்படும் தொழில்னுட்ப்பத்தை கையாண்டு தனது ஆபரேடிங் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது.




கூகிள் க்ரோம்(CHROME) ஆபரேடிங் சிஸ்டமானது க்ரோம் வெப் ப்ரௌசரின் மெருகூட்டப்பட்ட பதிப்பு என்றே கூகிளினால் அறிவிக்கப்பட்டுள்ளது அதாது டெஸ்க்டாப்பும் இணையமும் ஒன்றினைந்த ஒரு பதிப்பாக இதை கூறலாம். உங்களில் பலர் கூகிள் டெஸ்க்டாப் எனும் ஒரு மென்பொருளை பயன்படுத்தியிருப்பீர்கள் கிட்டதட்ட அது போன்றான அமைப்பே கூகிளின் புதிய OS ம். முழுக்க முழுக்க இணையத்தையே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.முதலில் netbooks எனப்படும் இணைய பயன்பாட்டிற்க்கான மடிக்கணனிகளிலேயே இது அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகிள் அறிவித்துள்ளது. கூகிள் பயன்படுத்தும் cloud computing technology யின் அனுகூலமான அம்சம் என்னவென்றால் இங்கே software requirments என்று எதுவும் கிடையாது ஒரு வேகமான இணைய தொடர்பு இருந்தால் போதும் உங்களுக்கு தேவையான எல்லா utility softwares உம் இணையத்தில் கிடைக்கும் word டில் போன்று டைப் பண்ண வேண்டுமா ஒரு குறித்த இணையத்தளம் உங்களுக்கு அந்த சேவையை தரும், games ஆ? இன்னொரு தளம், பாட்டு கேட்க வேண்டுமா அதற்கு வேறொரு தளம், சும்மா இல்லை எல்லாம் காசுக்குத்தான் இதனால் என்ன லாபம் என்றால் உங்களுக்கு சிறிய வேலைக்கு மட்டுமே தேவைப்படும் ஒரு மென்பொருளை நிரந்தரமாக பெரிய விலை கொடுத்து வாங்க தேவை இல்லை pirate software பிரச்சினை இல்லை தேவையான நேரத்தில் பாவித்து விட்டு அதற்கான பணத்தை இணையத்தில் செலுத்தினால் போதும், குறித்த மென்பொருளை கணனியில் நிறுவும் கஷ்டங்கள் இல்லை உதாரணமாக games க்கான VGA card போன்ற தொல்லைகள் இல்லை. இதனால் வன்பொருளுக்கான பண விரயம் இல்லை all you need is a fast reliable internet connection. ஆனாலும் இந்த cloud computing technology யில் சில பல security, privacy தொல்லைகள் இருக்கும் போலதான் இருக்கின்றது(data மற்றும் softawres ஒரு server போன்ற அமைப்பில் இருப்பதால்) எது எப்படியோ windows இனிமேல் சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கும் அலுவலகங்களில் லெட்டர் அடிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு technology யாக கூட மாறாலாம்..

 
பூச்சரம்