Monday, August 17, 2009

கூகிள் க்ரோம்(CHROME)

கடந்த மாதம் கூகுள் தனது OS வெளியீட்டை அறிவித்தாலும் அறிவித்தது ஐ.டி உலகம் ஆடித்தான் போய் இருக்கின்றது, அதிலும் மைக்ரொசாஃப்ட் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் கண்டுள்ளது, பிங் யாஹுவுடனான புதிய கூட்டணி சந்தை நிலவரத்தில் மைக்ரொசாஃப்டுக்கு ஆறுதல் அளித்தாலும் தனது ஆபரேடிங் சிஸ்டம் தாணாதிக்க நிலையை தக்கவைத்து கொள்வதில் மைக்ரொசாஃப்ட் தலையை பிய்த்துக் கொள்கிறது என்பதே இந்த கூட்டணிகளின் காரணம்.



ஏற்கனவே தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்டத்தின் தொடர்ச்சியான சறுக்கல்களினால் நொந்து போயிருந்த மைக்ரொசாஃப்ட் தனது வெளிவர இருக்கும் புதிய ஆபரேடிங் சிஸ்டமான WINDOWS 7 பெரிதும் நம்பியிருக்கின்றது. வரும் அக்டோபரில் வெளிவர இருக்கும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் 2009 டிசம்பருக்குள் 170 மில்லியன் பயனீட்டார்களை சென்றடையும் என கருத்து கணிப்புக்கள் சொன்னாலும் கூகிளின் புதிய ஆபரேடிங் சிஸ்டத்துக்கன அறிவிப்பு இந்த 170 மில்லியனில் கொஞ்சம் அல்ல நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை என்றாலும் தனது புதிய OS 2010 இன் பிற்ப்பகுதியிலேயே வெளிவரும் என்று கூகிள் அறிவித்து இருப்பது மைக்ரொசாஃப்டுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை தரலாம் கவனிக்கவும் தற்காலிக ஆறுதலே. காரணம் மைக்ரொசாஃப்ட் தனது முந்தைய பதிப்பான விஸ்டாவின் குறைகளை நிவர்த்திக்கும் முகமாக முக்கியமாக user friendliness ஐ அதிகரிக்கும் விதமாகவே WINDOWS 7 தயார் செய்து வரும் நிலையில் கூகிள் 16 அடி பாய்ந்து வருங்காலத்தில் கணனி உலகத்தையே ஆளக்கூடிய ஒரு தொழில்னுட்பமாக கருதக்கூடிய CLOUD COMPUTING(சில security issues இருந்தாலும்) எனப்படும் தொழில்னுட்ப்பத்தை கையாண்டு தனது ஆபரேடிங் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது.




கூகிள் க்ரோம்(CHROME) ஆபரேடிங் சிஸ்டமானது க்ரோம் வெப் ப்ரௌசரின் மெருகூட்டப்பட்ட பதிப்பு என்றே கூகிளினால் அறிவிக்கப்பட்டுள்ளது அதாது டெஸ்க்டாப்பும் இணையமும் ஒன்றினைந்த ஒரு பதிப்பாக இதை கூறலாம். உங்களில் பலர் கூகிள் டெஸ்க்டாப் எனும் ஒரு மென்பொருளை பயன்படுத்தியிருப்பீர்கள் கிட்டதட்ட அது போன்றான அமைப்பே கூகிளின் புதிய OS ம். முழுக்க முழுக்க இணையத்தையே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.முதலில் netbooks எனப்படும் இணைய பயன்பாட்டிற்க்கான மடிக்கணனிகளிலேயே இது அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகிள் அறிவித்துள்ளது. கூகிள் பயன்படுத்தும் cloud computing technology யின் அனுகூலமான அம்சம் என்னவென்றால் இங்கே software requirments என்று எதுவும் கிடையாது ஒரு வேகமான இணைய தொடர்பு இருந்தால் போதும் உங்களுக்கு தேவையான எல்லா utility softwares உம் இணையத்தில் கிடைக்கும் word டில் போன்று டைப் பண்ண வேண்டுமா ஒரு குறித்த இணையத்தளம் உங்களுக்கு அந்த சேவையை தரும், games ஆ? இன்னொரு தளம், பாட்டு கேட்க வேண்டுமா அதற்கு வேறொரு தளம், சும்மா இல்லை எல்லாம் காசுக்குத்தான் இதனால் என்ன லாபம் என்றால் உங்களுக்கு சிறிய வேலைக்கு மட்டுமே தேவைப்படும் ஒரு மென்பொருளை நிரந்தரமாக பெரிய விலை கொடுத்து வாங்க தேவை இல்லை pirate software பிரச்சினை இல்லை தேவையான நேரத்தில் பாவித்து விட்டு அதற்கான பணத்தை இணையத்தில் செலுத்தினால் போதும், குறித்த மென்பொருளை கணனியில் நிறுவும் கஷ்டங்கள் இல்லை உதாரணமாக games க்கான VGA card போன்ற தொல்லைகள் இல்லை. இதனால் வன்பொருளுக்கான பண விரயம் இல்லை all you need is a fast reliable internet connection. ஆனாலும் இந்த cloud computing technology யில் சில பல security, privacy தொல்லைகள் இருக்கும் போலதான் இருக்கின்றது(data மற்றும் softawres ஒரு server போன்ற அமைப்பில் இருப்பதால்) எது எப்படியோ windows இனிமேல் சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கும் அலுவலகங்களில் லெட்டர் அடிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு technology யாக கூட மாறாலாம்..

3 comments:

என்.கே.அஷோக்பரன் said...

விண்டோஸின் வீழ்ச்சியை அவ்வளவு லேசாகக்கூறிவிட முடியாது... நட்த்தியும் விட முடியாது. லினக்ஸ் தலை தூக்கிய காலத்தில் இதோ விண்டோஸ் முடிந்துவிட்டது என்றார்கள்... ஆனால் இன்று வரை விண்டோஸ் 90%ற்கும் மேற்பட்ட கணணிகளை இயக்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆக கூகுள் க்ரோம் மூலமாக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர அது ஒரு தீவிரமான மாற்றத்தை உடனடியாக தரக்கூடியதல்ல. இன்றைக்கும் லினக்ஸ் - ஓபன் சோர்ஸ் எனக் கூவும் பலர் தங்கள் கணணிகளில் விண்டோஸைப் பயன்படுத்துவதையும் நான் கண்டிருக்கின்றேன் - பார்ப்போம் நல்லது நடந்தால் நல்லது தானே....

தேஜஸ்வினி said...
This comment has been removed by the author.
தேஜஸ்வினி said...

உண்மைத்தான் ஆனாலும் விஸ்டாவின் மோசமான அனுபவம் மைக்ரோசாப்டின் புதிய தொழில்நுட்பங்களுடன் போட்டி போட முடியாத தன்மையையே காட்டுகின்றது

Post a Comment

 
பூச்சரம்