Sunday, September 20, 2009
எங்கு காண்கிலும்.....
எங்கு காண்கிலும் கடவுளென்றால் ஆன்மீகம்
எங்கு காண்கிலும் நீயென்றால்......
தெருவில் நீ வருவாய் என காத்திருக்கையில்
எதிர் வரும் எல்லா பெண்களிலும் உன் சாயல்.
பெண்ணுடல் பெரும் தணல்
ஆண் மனம் சாம்பல்
Sunday, August 30, 2009
எனக்கு பிடித்த....
மழை,
நேற்றைய காற்று வீசும் சூரியன் F.M இன் மணித்துளிகள்,
இரவில் எரியும் ஒற்றை விளக்கு கம்பம்,
என அனைத்துக்கும் உன்னை பிடித்து போய்
Sunday, August 23, 2009
ஸ்ரேயாவின் கந்தசாமி
-ஒன்னுமில்ல...
Thursday, August 20, 2009
Web 3.0
இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.
Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.
ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.
Wednesday, August 19, 2009
கடவுளின் நகரம்
திரைப்படங்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட இணையதளங்களில் Ganster movies பிரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ள இத்திரைப்படம். ஓளிப்பதிவிலும்,படத்தொகுப்பிலும் பல புதிய பரிமாணங்களை கையாண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. Rio De Genero வின் நிழல் உலகத்தை தழுவி எடுக்கப்பட்ட இத் திரைப்படம் பல்வேரு விழாக்களில் 40 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. 2002 ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இயக்குனர் Fernando Meirelles.
THE FAR SPENT DAY
Tuesday, August 18, 2009
மேகக் கணினியம்
ஏற்கனவே சொன்னது போல் cloud computing என்பது இணையத்தையே ஆதாரமாக கொண்டு செயல்படுவது, ஒரு பெரிய servar ல் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான முடிந்தால் அதிவேகமான ஒரு internet connection மட்டுமே. தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்து கொள்ளலாம் உங்கள் பாவனைக்கான பணத்தை மட்டும் அந்த SaaS provider இடம் செலுத்தினால் போதுமானது. இப்படி தேவையான அல்லது தேவையற்ற எல்லாவிதமான மென்பொருட்களும் செயலி(application) களும் மேகங்கள் போன்ற web server களில் கிடைப்பதனால் தான் இந்த cloud computing. நமக்கு தெரியாமலே இந்த cloud computing ஐ அனுபவித்து கொண்டு இருக்கின்றோம் உதாரணமாக E-Mail service providers, g-mail ஐ எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-Mail கள் எல்லாம் கூகுல் server இலேயே சேமிக்கப்படுகிறது இணையத்தில் இணைந்த கணத்தில் இருந்து அந்த Data களை பாவிப்பவராகிறோம். சொல்லப்போனால் இந்த வலைபதிவது கூட CLOUD COMPUTING இன் ஒரு அம்சம்தான். இந்த CLOUD COMPUTING இனால் அதிகம் லாபமடைய போவது தனி நபர்களை காட்டிலும் கம்பனிகளே காரணம் இந்த தொழில்னுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும் ஒரு மானிட்டரும் குறித்த OS ஐ இயங்க செய்ய தேவையான processor + hard disk போதுமானது மற்ற எல்லாவற்றையும் SssS service provider பார்த்துக்கொள்வார். SaaS சேவைகளை consumption அடிப்படையிலேயோ subscription அடிப்படையிலேயோ பெற்றுக்கொள்ளலாம். இதன் security மற்றும் privacy தொடர்பான கேள்விகளுக்கு authentication என்ற முறையே பதிலாக உல்லது அதாவது username, password முறை. குறித்த SaaS நிறுவன சேவையில் உங்களின் Data மற்றும் Privacy க்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவன சேவைகளை துண்டிக்கவும் அது தொடர்பான financial losses களை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.
Monday, August 17, 2009
கூகிள் க்ரோம்(CHROME)
ஏற்கனவே தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்டத்தின் தொடர்ச்சியான சறுக்கல்களினால் நொந்து போயிருந்த மைக்ரொசாஃப்ட் தனது வெளிவர இருக்கும் புதிய ஆபரேடிங் சிஸ்டமான WINDOWS 7 பெரிதும் நம்பியிருக்கின்றது. வரும் அக்டோபரில் வெளிவர இருக்கும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் 2009 டிசம்பருக்குள் 170 மில்லியன் பயனீட்டார்களை சென்றடையும் என கருத்து கணிப்புக்கள் சொன்னாலும் கூகிளின் புதிய ஆபரேடிங் சிஸ்டத்துக்கன அறிவிப்பு இந்த 170 மில்லியனில் கொஞ்சம் அல்ல நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை என்றாலும் தனது புதிய OS 2010 இன் பிற்ப்பகுதியிலேயே வெளிவரும் என்று கூகிள் அறிவித்து இருப்பது மைக்ரொசாஃப்டுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை தரலாம் கவனிக்கவும் தற்காலிக ஆறுதலே. காரணம் மைக்ரொசாஃப்ட் தனது முந்தைய பதிப்பான விஸ்டாவின் குறைகளை நிவர்த்திக்கும் முகமாக முக்கியமாக user friendliness ஐ அதிகரிக்கும் விதமாகவே WINDOWS 7 தயார் செய்து வரும் நிலையில் கூகிள் 16 அடி பாய்ந்து வருங்காலத்தில் கணனி உலகத்தையே ஆளக்கூடிய ஒரு தொழில்னுட்பமாக கருதக்கூடிய CLOUD COMPUTING(சில security issues இருந்தாலும்) எனப்படும் தொழில்னுட்ப்பத்தை கையாண்டு தனது ஆபரேடிங் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது.
கூகிள் க்ரோம்(CHROME) ஆபரேடிங் சிஸ்டமானது க்ரோம் வெப் ப்ரௌசரின் மெருகூட்டப்பட்ட பதிப்பு என்றே கூகிளினால் அறிவிக்கப்பட்டுள்ளது அதாது டெஸ்க்டாப்பும் இணையமும் ஒன்றினைந்த ஒரு பதிப்பாக இதை கூறலாம். உங்களில் பலர் கூகிள் டெஸ்க்டாப் எனும் ஒரு மென்பொருளை பயன்படுத்தியிருப்பீர்கள் கிட்டதட்ட அது போன்றான அமைப்பே கூகிளின் புதிய OS ம். முழுக்க முழுக்க இணையத்தையே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.முதலில் netbooks எனப்படும் இணைய பயன்பாட்டிற்க்கான மடிக்கணனிகளிலேயே இது அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகிள் அறிவித்துள்ளது. கூகிள் பயன்படுத்தும் cloud computing technology யின் அனுகூலமான அம்சம் என்னவென்றால் இங்கே software requirments என்று எதுவும் கிடையாது ஒரு வேகமான இணைய தொடர்பு இருந்தால் போதும் உங்களுக்கு தேவையான எல்லா utility softwares உம் இணையத்தில் கிடைக்கும் word டில் போன்று டைப் பண்ண வேண்டுமா ஒரு குறித்த இணையத்தளம் உங்களுக்கு அந்த சேவையை தரும், games ஆ? இன்னொரு தளம், பாட்டு கேட்க வேண்டுமா அதற்கு வேறொரு தளம், சும்மா இல்லை எல்லாம் காசுக்குத்தான் இதனால் என்ன லாபம் என்றால் உங்களுக்கு சிறிய வேலைக்கு மட்டுமே தேவைப்படும் ஒரு மென்பொருளை நிரந்தரமாக பெரிய விலை கொடுத்து வாங்க தேவை இல்லை pirate software பிரச்சினை இல்லை தேவையான நேரத்தில் பாவித்து விட்டு அதற்கான பணத்தை இணையத்தில் செலுத்தினால் போதும், குறித்த மென்பொருளை கணனியில் நிறுவும் கஷ்டங்கள் இல்லை உதாரணமாக games க்கான VGA card போன்ற தொல்லைகள் இல்லை. இதனால் வன்பொருளுக்கான பண விரயம் இல்லை all you need is a fast reliable internet connection. ஆனாலும் இந்த cloud computing technology யில் சில பல security, privacy தொல்லைகள் இருக்கும் போலதான் இருக்கின்றது(data மற்றும் softawres ஒரு server போன்ற அமைப்பில் இருப்பதால்) எது எப்படியோ windows இனிமேல் சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கும் அலுவலகங்களில் லெட்டர் அடிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு technology யாக கூட மாறாலாம்..