எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் விமர்சகர்களுக்கும் செம்ம போட்டியா இருக்கு போல , பத்த வச்சது சாரு நிவேதிதாதான் . அவர் பாட்டுக்கு பாதி படம் மட்டும் பாத்துட்டு படம் குப்பைனு சொல்லிட்டு போயிட்டாரு. அதெப்படி சார் ..? பாதி படம் பாத்துட்டு விமர்சனம் எழுதுவிங்க? அத சரி விடுங்க . இரண்டு நாள் கழிச்சு , இறைவி படம் சமூக விரோதமான படமாம் , இந்திய இளைஞர்களை கிரிமினல்களாக மாற்றும் படம்னு சொல்லறார். என் இதுக்கு முன்னாடி இவ்வளவு வன்முறையா யாருமே படம் பண்ணலையா? சரி நல்ல படமாவே எடுப்போம் அப்போ எல்லோரும் பார்த்து திருந்திருவாங்களா என்ன ??
சரி இப்போ இறைவி பற்றி....முதலில் இது 2016 ல் வந்திருக்க வேண்டிய படமே இல்லை. படத்தில் காட்டப்படும் பெண்கள் எல்லாம் கார்த்திக் சுப்புராஜ் பிறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டவர்கள். தவிர திரைக்கதை செம ஸ்லோ .. எல்லா இயக்குனருக்கும் அடுத்தடுத்து படங்கள் இயக்கும் போது ஒரு வெற்றிடம் வரும். வெற்றி மாறன் சொல்வது போல் ஒரு படம் எழுதி முடிந்தவுடன் இயக்குனருக்கும் உலகத்திற்க்குமான வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இப்போது வரும் எல்லா இயக்குனர்களின் முதல் படங்கள் சிறப்பாக(ஓரளவுக்காவது ) இருப்பதற்கும் பிறகு அவரசப்பட்டு அடுத்தடுத்த படங்களில் சறுக்குவதும் இதனால்தான். ரசிகனை ரொம்ப மடையனாக நினைப்பவர்களால் மட்டுமே இப்படி ஒரு half baked படத்தை கொடுக்க முடியும். பிட்ஸா போன்ற ஒரு நல்ல எண்டெர்டெயினரை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் மொக்கை வாங்கிய படம் இது. ஜிகிர்தண்டாவில் கூட லேசான மொக்கை வாடை வந்தது ஒருவரும் எச்சரிக்கவில்லை ..இறைவி வந்துவிட்டது ..