தமிழில் ஒரு apocalyptic முயற்சி. மூன்றரை நேர படத்தில் இதற்கு பின்னால் இருந்த 2 வருடங்களுக்கும் மேலான உழைப்பு நியாயம் என்றே சொல்ல தோன்றுகிறது. இடைவேளக்கு முன் பின் என இரு வேறு வித திரைக்கதைகளை தந்திருக்கிறார்கள். முதல் பாதியின் விறுவிறுப்பிற்கு பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்ஸ் ஆல்பம் போட்டிருக்கலாம். புதுப்பேட்டையில் பாடல்களை அருமையாக கையாண்டு இருந்தார் இயக்குனர் முதல் பாடலை தவிர. மற்றபடி வரலாற்று புனைவு, பின்னவீனத்துவம்,மேஜிகல் ரியலிஸம் என தெரியாதவற்றில் ஜல்லியடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை அதுதவிர முதலிலேயே எல்லாம் கற்பனை என்று போட்ட பிறகு எதற்கு அதெல்லாம்?.
படம் பார்க்கும் போது நிறைய இடங்களில் மெல்கிப்சனின் Apocalypto வை ஞாபகப்படுத்தியது ஆனால் Apocalyto வை அதற்கு பின் பார்த்த போது ஒற்றுமைகள் ஒன்றும் தென்படவில்லை தரத்தை தவிர மற்றபடி சில இடங்களில் பின்னனி இசை இரண்டிலும் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருந்தது, அதற்கென்ன ஆனானபட்ட மணிரத்னமே Amorres perros ஐ ஆய்த எழுத்தாக உருவும் போது G V பிரகாஷ் உருவினால் என்ன சின்ன பையன் செஞ்சிட்டு போறாரு. மற்றபடி G V பிரகாஷ் தன் அனுபவத்துக்கு உழைத்து இருக்கிறார் ஆனாலும் யுவன் இல்லாதது தெரிவதை தடுக்க முடியவில்லை. இயக்குனரின் முந்தைய படங்களில் இருந்த கலைத்தன்மை இதில் மிஸ்ஸிங் 7G ரெயின்போ காலனி தவிர. முந்தைய படங்களில் nuances எனப்படும் அருமையான தருணங்கள் இதில் கொஞ்சம் கூட இல்லை அதுவும் சேர்த்து என்றால் இன்னும் 2 மணித்தியாலமாவது செல்வாவுக்கு தேவைப்படும். மற்றபடி படத்தில் eroticness வெகுவாக குறைக்க பட்டிருக்கின்றது குறிப்பாக ரீமா சிறுநீர் கழிக்கும் காட்சி மற்றும் தன் முலையில் பால் இல்லை என்று பெண் முலையை அழுத்தும் காட்சி.
எப்படியோ படத்தில் குறைகள் இருந்தாலும் சொல்ல தோன்றவில்லை எனென்றால் இதுவும் புதுப்பேட்டை போல முன் பின் உதாரணமில்லாத ஒரு படைப்பு Hats off செல்வா. தமிழில் ஒரு புது முயற்சிக்கு
-------------------------------------------------------------------------------------------------
நான் கடவுளுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டியதுதான் ஆனால் இது நான் கடவுளுக்கானது மட்டுமே அல்லாமல் பாலாவின் முந்தய படைப்புகளுக்கும் சேர்த்தே என்றே கொள்ள வேண்டும். பாலாவின் படங்களில் மிரட்டுவது மேக்கிங்க் மட்டும் தான் மற்றபடி யதார்த்தங்கள் அங்கே சாகடிக்கபடும் என்றாலும் பாலா கொண்டாடபடவேண்டிய கலைஞன் .
வாரணம் ஆயிரம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்றிருக்கின்றது. வாரணம் ஆயிரம் ஒரு கொண்டாட்டமான படம் சிறந்த படமென்றால் இல்லை என்று தான் சொல்லலாம். அத்தோடு இந்தவிருதுகளுக்கான காலகட்டம் தான் எனக்கு புரியமாட்டேன் என்கிறது வாரணம் ஆயிரம் 2008 ல் வந்தது நான் கடவுள் 2009 ல். வாரணம் ஆயிரம் 2008ல் வந்த சிறந்த படமென்றால் அஞ்சாதே மற்றும் சுப்பிரமணியபுரம் எப்படி மிஸ்ஸானது. ஏதோ பார்த்து செய்ங்க.
-------------------------------------------------------------------------------------------------நாளைய ஜனாதிபதி தேர்தலில் MR வெற்றி பெறுவார் என்றால் கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகளால் பெரும்பாலும் வெற்றி பெறுவார் ஆனால் CBK யின் ஜெனரல் க்கு ஆதரவான அறிவிப்பு இந்த மார்ஜினில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தலாமே ஒழிய ஜெனரலுக்கு வெற்றியை தருமென்றால் கஷ்டம் தான். அதே வேளை கணக்கெடுப்பு விருப்பு வாக்குகள் பக்கம் நகருமாயின் ஜெனரல் வெற்றி நிச்சயம். MR kku குத்துபவன் கூட ஜெனெரலுக்கு குத்துவான் என எதிர்ப்பார்க்கலாம் ஆனால் இதன் vice versa உண்மையாகாது. உண்மையில் ஜெனரலுக்கு தனிப்பட்ட பலம் என்று எதுவுமே இல்லை MR க்காவது யுத்தத்தை வென்றேன் என்ற ப்ளஸ் உள்ளது ஆனால் அது மட்டுமே ப்ளஸ் ஆக உள்ளதுதான் அவரின் மிகப்பெரிய பலவீனமே. ஜெனரலை பார்த்தால் MR and Co அடித்த கொள்ளைகளை வைத்தே பிரசாரங்களில் வென்றிருக்கிறார். அதுவும் அந்த பிரசாரங்கள் மிகச்சரியாக இதற்கு முந்தைய தேர்தல்களில் UNP தவறவிட்ட பெரும்பான்மையான அடித்தட்டு மக்களை சென்றடைந்து இருக்கின்றது, கொழும்பிலும் மற்றைய இடங்களிலும் கூடிய கூட்டமே இதற்கு சாட்சி ஆனால் கூட்டமெல்லம் ஓட்டாக மாறுமா என்பதற்கு இலங்கை அரசியலில் அல்ல உலகத்தில் எந்த அரசியலிலும் பதிலில்லை. ஆனால் கஷ்ட்டமான ஒரு உண்மை என்ன என்றால் இப்பொதெல்லாம் சிங்களவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான் அதனால் ஜெனெரல் ஆறுதலடையலாம். முன்பு பெற்றோல் விலை கூடினால் "kamaknah me salli yudhdhatta hari yanawane" என்றவன் இப்போது "api ape mallila aiyalatavath udhavu keranna barivela inne un 115 indhagena rata kanawa" என்கிறான்.
ஆனால் MR வெ மீண்டும் வந்தாலும் முன்பு போல் கொள்ளைகள் சாத்தியப்படாது. அடித்த கொள்ளைகளில் பெரும்பாலும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களிலாயே அடிக்கப்பட்டது ஆகவே MR வென்றால் அவரது இமேஜை மீளக்கட்டியெழுப்ப குறைந்தபட்சம் அவற்றை கொஞ்ச காலத்துக்கு நிறுத்தியாவது வைக்க வேண்டும். ஜெனெரல் வந்தால் என்னவாகும் என்பதற்கு சரியான விளக்கமில்லாமால் தான் இருக்கின்றது எது எப்படி என்றாலும் இப்போது இலங்கை சரியான பாதையிலேயே செல்கின்றது மேலதிக விளக்கங்களுக்கு LMD வாங்கி படிங்க.
எல்லாரும் முடியுமான வரை ஓட்டு போட போங்க. போகாதவங்க நாளைக்கு இந்திய குடியரசு தினத்துக்கு ரொம்ப படமெல்லாம் போடுறாங்க வீட்ல இருந்து பாருங்க. அப்படி பாக்கிறவங்க பசங்க படத்த மிஸ் பண்ணிராதிங்க இல்ல நாங்க உலகபடம்தான் பார்ப்போம்னு சொன்னிங்கனா உங்களுக்காவே சன் டிவில அழகிய தமிழ் மகன் போடுறாங்க பார்த்துட்டு செத்து போங்க.