Monday, June 6, 2016

இறைவி

எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் விமர்சகர்களுக்கும் செம்ம போட்டியா இருக்கு போல , பத்த வச்சது சாரு நிவேதிதாதான் . அவர் பாட்டுக்கு பாதி படம் மட்டும் பாத்துட்டு படம் குப்பைனு சொல்லிட்டு போயிட்டாரு. அதெப்படி சார் ..? பாதி படம் பாத்துட்டு விமர்சனம் எழுதுவிங்க? அத சரி விடுங்க . இரண்டு நாள் கழிச்சு , இறைவி படம் சமூக விரோதமான படமாம் , இந்திய இளைஞர்களை கிரிமினல்களாக மாற்றும் படம்னு சொல்லறார். என் இதுக்கு முன்னாடி இவ்வளவு வன்முறையா யாருமே படம் பண்ணலையா? சரி நல்ல படமாவே எடுப்போம் அப்போ எல்லோரும் பார்த்து திருந்திருவாங்களா என்ன ??

oh..sorry you guys from a country where a cine star can be a chief minister ..

சரி இப்போ இறைவி பற்றி....முதலில் இது 2016 ல் வந்திருக்க வேண்டிய படமே இல்லை. படத்தில் காட்டப்படும் பெண்கள் எல்லாம் கார்த்திக் சுப்புராஜ் பிறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டவர்கள். தவிர திரைக்கதை செம ஸ்லோ .. எல்லா இயக்குனருக்கும் அடுத்தடுத்து படங்கள் இயக்கும்  போது ஒரு வெற்றிடம் வரும். வெற்றி மாறன் சொல்வது போல் ஒரு படம் எழுதி முடிந்தவுடன் இயக்குனருக்கும் உலகத்திற்க்குமான வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இப்போது வரும் எல்லா  இயக்குனர்களின் முதல் படங்கள் சிறப்பாக(ஓரளவுக்காவது ) இருப்பதற்கும் பிறகு அவரசப்பட்டு அடுத்தடுத்த படங்களில் சறுக்குவதும் இதனால்தான். ரசிகனை ரொம்ப மடையனாக  நினைப்பவர்களால் மட்டுமே இப்படி ஒரு half baked படத்தை கொடுக்க முடியும். பிட்ஸா போன்ற ஒரு நல்ல எண்டெர்டெயினரை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் மொக்கை வாங்கிய படம் இது. ஜிகிர்தண்டாவில் கூட லேசான மொக்கை வாடை வந்தது ஒருவரும் எச்சரிக்கவில்லை ..இறைவி வந்துவிட்டது ..








Saturday, April 10, 2010

ஏதோ ஒன்று..

எழுதிய வரிகளை நிறுத்திவிட்டு யோசிக்கிறேன்...

எனது பேனையிலிருந்தும் அழகான வரிகள் ??

உன்னை பற்றி எழுதியதால் தான் என்னவோ

Monday, January 25, 2010

ஆயிரத்தில் ஒருவனும் நான் கடவுளும் பின்னே மஹிந்த ராஜபக்ஷெவும்

தமிழில் ஒரு apocalyptic முயற்சி. மூன்றரை நேர படத்தில் இதற்கு பின்னால் இருந்த 2 வருடங்களுக்கும் மேலான உழைப்பு நியாயம் என்றே சொல்ல தோன்றுகிறது. இடைவேளக்கு முன் பின் என இரு வேறு வித திரைக்கதைகளை தந்திருக்கிறார்கள். முதல் பாதியின் விறுவிறுப்பிற்கு பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்ஸ் ஆல்பம் போட்டிருக்கலாம். புதுப்பேட்டையில் பாடல்களை அருமையாக கையாண்டு இருந்தார் இயக்குனர் முதல் பாடலை தவிர. மற்றபடி வரலாற்று புனைவு, பின்னவீனத்துவம்,மேஜிகல் ரியலிஸம் என தெரியாதவற்றில் ஜல்லியடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை அதுதவிர முதலிலேயே எல்லாம் கற்பனை என்று போட்ட பிறகு எதற்கு அதெல்லாம்?.
படம் பார்க்கும் போது நிறைய இடங்களில் மெல்கிப்சனின் Apocalypto வை ஞாபகப்படுத்தியது ஆனால் Apocalyto வை அதற்கு பின் பார்த்த போது ஒற்றுமைகள் ஒன்றும் தென்படவில்லை தரத்தை தவிர மற்றபடி சில இடங்களில் பின்னனி இசை இரண்டிலும் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருந்தது, அதற்கென்ன ஆனானபட்ட மணிரத்னமே Amorres perros ஐ ஆய்த எழுத்தாக உருவும் போது G V பிரகாஷ் உருவினால் என்ன சின்ன பையன் செஞ்சிட்டு போறாரு. மற்றபடி G V பிரகாஷ் தன் அனுபவத்துக்கு உழைத்து இருக்கிறார் ஆனாலும் யுவன் இல்லாதது தெரிவதை தடுக்க முடியவில்லை. இயக்குனரின் முந்தைய படங்களில் இருந்த கலைத்தன்மை இதில் மிஸ்ஸிங் 7G ரெயின்போ காலனி தவிர. முந்தைய படங்களில் nuances எனப்படும் அருமையான தருணங்கள் இதில் கொஞ்சம் கூட இல்லை அதுவும் சேர்த்து என்றால் இன்னும் 2 மணித்தியாலமாவது செல்வாவுக்கு தேவைப்படும். மற்றபடி படத்தில் eroticness வெகுவாக குறைக்க பட்டிருக்கின்றது குறிப்பாக ரீமா சிறுநீர் கழிக்கும் காட்சி மற்றும் தன் முலையில் பால் இல்லை என்று பெண் முலையை அழுத்தும் காட்சி.
எப்படியோ படத்தில் குறைகள் இருந்தாலும் சொல்ல தோன்றவில்லை எனென்றால் இதுவும் புதுப்பேட்டை போல முன் பின் உதாரணமில்லாத ஒரு படைப்பு Hats off செல்வா. தமிழில் ஒரு புது முயற்சிக்கு


-------------------------------------------------------------------------------------------------


நான் கடவுளுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டியதுதான் ஆனால் இது நான் கடவுளுக்கானது மட்டுமே அல்லாமல் பாலாவின் முந்தய படைப்புகளுக்கும் சேர்த்தே என்றே கொள்ள வேண்டும். பாலாவின் படங்களில் மிரட்டுவது மேக்கிங்க் மட்டும் தான் மற்றபடி யதார்த்தங்கள் அங்கே சாகடிக்கபடும் என்றாலும் பாலா கொண்டாடபடவேண்டிய கலைஞன் .

வாரணம் ஆயிரம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்றிருக்கின்றது. வாரணம் ஆயிரம் ஒரு கொண்டாட்டமான படம் சிறந்த படமென்றால் இல்லை என்று தான் சொல்லலாம். அத்தோடு இந்தவிருதுகளுக்கான காலகட்டம் தான் எனக்கு புரியமாட்டேன் என்கிறது வாரணம் ஆயிரம் 2008 ல் வந்தது நான் கடவுள் 2009 ல். வாரணம் ஆயிரம் 2008ல் வந்த சிறந்த படமென்றால் அஞ்சாதே மற்றும் சுப்பிரமணியபுரம் எப்படி மிஸ்ஸானது. ஏதோ பார்த்து செய்ங்க.
-------------------------------------------------------------------------------------------------


நாளைய ஜனாதிபதி தேர்தலில் MR வெற்றி பெறுவார் என்றால் கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகளால் பெரும்பாலும் வெற்றி பெறுவார் ஆனால் CBK யின் ஜெனரல் க்கு ஆதரவான அறிவிப்பு இந்த மார்ஜினில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தலாமே ஒழிய ஜெனரலுக்கு வெற்றியை தருமென்றால் கஷ்டம் தான். அதே வேளை கணக்கெடுப்பு விருப்பு வாக்குகள் பக்கம் நகருமாயின் ஜெனரல் வெற்றி நிச்சயம். MR kku குத்துபவன் கூட ஜெனெரலுக்கு குத்துவான் என எதிர்ப்பார்க்கலாம் ஆனால் இதன் vice versa உண்மையாகாது. உண்மையில் ஜெனரலுக்கு தனிப்பட்ட பலம் என்று எதுவுமே இல்லை MR க்காவது யுத்தத்தை வென்றேன் என்ற ப்ளஸ் உள்ளது ஆனால் அது மட்டுமே ப்ளஸ் ஆக உள்ளதுதான் அவரின் மிகப்பெரிய பலவீனமே. ஜெனரலை பார்த்தால் MR and Co அடித்த கொள்ளைகளை வைத்தே பிரசாரங்களில் வென்றிருக்கிறார். அதுவும் அந்த பிரசாரங்கள் மிகச்சரியாக இதற்கு முந்தைய தேர்தல்களில் UNP தவறவிட்ட பெரும்பான்மையான அடித்தட்டு மக்களை சென்றடைந்து இருக்கின்றது, கொழும்பிலும் மற்றைய இடங்களிலும் கூடிய கூட்டமே இதற்கு சாட்சி ஆனால் கூட்டமெல்லம் ஓட்டாக மாறுமா என்பதற்கு இலங்கை அரசியலில் அல்ல உலகத்தில் எந்த அரசியலிலும் பதிலில்லை. ஆனால் கஷ்ட்டமான ஒரு உண்மை என்ன என்றால் இப்பொதெல்லாம் சிங்களவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான் அதனால் ஜெனெரல் ஆறுதலடையலாம். முன்பு பெற்றோல் விலை கூடினால் "kamaknah me salli yudhdhatta hari yanawane" என்றவன் இப்போது "api ape mallila aiyalatavath udhavu keranna barivela inne un 115 indhagena rata kanawa" என்கிறான்.
ஆனால் MR வெ மீண்டும் வந்தாலும் முன்பு போல் கொள்ளைகள் சாத்தியப்படாது. அடித்த கொள்ளைகளில் பெரும்பாலும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களிலாயே அடிக்கப்பட்டது ஆகவே MR வென்றால் அவரது இமேஜை மீளக்கட்டியெழுப்ப குறைந்தபட்சம் அவற்றை கொஞ்ச காலத்துக்கு நிறுத்தியாவது வைக்க வேண்டும். ஜெனெரல் வந்தால் என்னவாகும் என்பதற்கு சரியான விளக்கமில்லாமால் தான் இருக்கின்றது எது எப்படி என்றாலும் இப்போது இலங்கை சரியான பாதையிலேயே செல்கின்றது மேலதிக விளக்கங்களுக்கு LMD வாங்கி படிங்க.
எல்லாரும் முடியுமான வரை ஓட்டு போட போங்க. போகாதவங்க நாளைக்கு இந்திய குடியரசு தினத்துக்கு ரொம்ப படமெல்லாம் போடுறாங்க வீட்ல இருந்து பாருங்க. அப்படி பாக்கிறவங்க பசங்க படத்த மிஸ் பண்ணிராதிங்க இல்ல நாங்க உலகபடம்தான் பார்ப்போம்னு சொன்னிங்கனா உங்களுக்காவே சன் டிவில அழகிய தமிழ் மகன் போடுறாங்க பார்த்துட்டு செத்து போங்க.

Sunday, September 20, 2009

எங்கு காண்கிலும்.....


எங்கு காண்கிலும் கடவுளென்றால் ஆன்மீகம்
எங்கு காண்கிலும் நீயென்றால்......


தெருவில் நீ வருவாய் என காத்திருக்கையில்
எதிர் வரும் எல்லா பெண்களிலும் உன் சாயல்.


பெண்ணுடல் பெரும் தணல்
ஆண் மனம் சாம்பல்







Sunday, August 30, 2009

எனக்கு பிடித்த....

எனக்கு பிடித்த தனிமை,

மழை,

நேற்றைய காற்று வீசும் சூரியன் F.M இன் மணித்துளிகள்,

இரவில் எரியும் ஒற்றை விளக்கு கம்பம்,

என அனைத்துக்கும் உன்னை பிடித்து போய்
உன் நினைவிலேயே சங்கமிக்கின்றன

Sunday, August 23, 2009

ஸ்ரேயாவின் கந்தசாமி


முன் டிஸ்கி- நாடோடிகள் படத்தில் காது கேட்காமல் போன பாண்டியை போலீஸ் விசாரிக்கும் ஸீனை நினைச்சிகிட்டு கீழ படிங்க....


படத்துல கதை என்ன??
-ஒன்னுமில்ல...


விக்ரமுக்குக்கும் அவரோடு சேர்ந்து ரெய்டுக்கு போறவனுங்களுக்கும் என்ன சம்பந்தம்??

- எல்லாருமே பள்ளிகூடத்துல இருந்து ஒன்னா படிச்சவய்ங்க..


டைரக்டர் சுசி கணேசனுக்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்??

-அவரும் விக்ரமோட ஒன்னா படிச்சவரு..


CBI JOINT DIRECTOR க்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்??

-அவரும் விக்ரமோட சேர்ந்து எழைகளுக்கு உதவுறாறாம்..


முமைத்கானுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்??

-அவருதான் படத்துக்கு எல்லமே..அவராலதான் படமே முடியுதுனா பாத்துக்குங்க.


இப்படி வில்லன், பிரபு,வடிவேலு தவிர மத்த எல்லாரும் சேர்ந்து பணக்காரங்ககிட்ட பணத்தப் புடுங்கி எழைகளுக்கு கொடுக்குறாங்க அத போலீஸ் படம் முழுக்க தேடிக்கிட்டே இருக்காங்க சும்மா இல்ல மூனெகால் மணித்தியாலமா, கடைசியில புடிக்கிறாங்க..


அவ்ளோதாம்பா முடிஞ்சுபோச்...போங்க போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்க..


பின் டிஸ்கி- படத்துல ஒரே ஆறுதல் ஸ்ரேயா..சும்மா சொல்லகூடாது பொண்ணு இங்க்லிஷ் உடம்போட நின்னு விளையாடுது. ஸ்ரேயா இடுப்புக்கே டிக்கட்டுக்கு குடுத்த காசு செரிச்சு போச்சு



Thursday, August 20, 2009

Web 3.0


Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0.

இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.

Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.

ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.
 
பூச்சரம்